tamilnadu

img

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிறையில் இருந்து விடுதலை.. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய காங்கிரஸ் பிரமுகர் சதாப் ஜாபர், கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307, 332, 353, 147, 120-பி ஆகியவற்றின் கீழ், கொலைமுயற்சி, கடமையைச் செய்ய விடாமல் அரசு ஊழியரைத் தடுத்தல், தாக்கி காயம் ஏற்படுத்துதல், சதித் திட்டம் தீட்டுதல் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஆதித்யநாத் அரசு அவர்களை சிறையில் அடைத் தது.

இந்நிலையில் லக்னோ நீதிமன்றம் அவர்களுக்கு கடந்த 4-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. சதாப் ஜாபர், எஸ்.ஆர். தாராபுரி உட்பட மொத்தம் 13 பேருக்கு ஜாமீன் கிடைத்தது.ஆனால், ஆதித்யநாத் அரசு அன்றைய தினமே அவர்களை விடுதலை செய்யாமல், சிறை நடைமுறைகள் என்று சாக்குப்போக்கு கூறி, நீதிமன்றம் உத்தரவிட்டு 3 நாட்களுக்கு பிறகே விடுவித்துள்ளது. செவ்வாயன்று அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் திரண்டு மாலை அணிவித்தும், முழக்கங்களை எழுப்பியும் வரவேற்பு அளித்துள்ளனர்.

;